குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும் குலதெய்வமே நமக்கு எளிதில் அருள் தரும்.

குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள். ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வணங்கலாம். அதேசமயம் ஒருபோதும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் விட்டுவிடக் கூடாது.

எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு இணையானது ஏதுமில்லை. இந்த வழிபாட்டால் கிடைக்கும் வலிமைக்கு நிகரானது எதுவுமில்லை. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது என்பது முன்னோர் வாக்கு.

மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலனையும் பெற்றுத்தரும் குலதெய்வங்கள் பெரும்பாலும் சிறுதெய்வங்கள் ஆகவே காணப்படுகிறது சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது அதன் சக்தியை அளவிட முடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை எனவேதான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்ற சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை, இன்று நாம் வாழ்க்கைப் போக்கு இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் நமக்கு தெரியாமல் அல்லவா உள்ளது. நம் முன்னோர்களின் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும் இந்த தந்தை வழி பாட்டனார் வரிசையில் மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம் அறியலாம் அது ஒரு ரிஷியின் வழி பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும் இதன்படி பார்த்தால் குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது நம் பரம்பரை வரிசையில் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம் இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே நாம் அங்கே போய் நின்று அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் பொழுது நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள் இது எத்தனை தூரப்பார்வையோடு வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம். விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே, ஒவ்வொரு குழந்தைக்கும் 23 + 23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம் இது தாய் மூலம் 23 மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதுல பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன ஆணின் y யுடன் , பெண்ணின் x சேர்ந்தா ஆண் குழந்தையும், இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு உறுதி இட்டு கூறுகிறது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது , பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. Y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை பொருத்தவையே ஆகும் . மேலும் இந்த குரோமோசோம்கள் பலவீனமடைய கூடியது என்பதாகும் பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த உறவுகளுக்கு இடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான் பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்த பிறகு கணவரின் குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வனங்குவது கிடையாது அப்படி இல்லாமல் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் தன் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

உறவுகள் குளம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம். குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அனுகிரகம் இல்லையென்றால் ஒருவர் என்னதான் சக்திவாய்ந்த ஹோமம் யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

வீட்டில் எந்தவொரு சிறிய நிகழ்வு என்றாலும் குலதெய்வத்தை உடனே வணங்கவேண்டும். கல்யாணமோ காதுகுத்தோ எதுவாக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்கிவிட்டுத்தான் வீட்டில் மங்கல காரியங்களை நடத்துவார்கள்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை; குலதெய்வத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை’ என்று கிராமத்தில் சொலவடை சொல்லுவார்கள். கிராமங்களில், இன்றைக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதைப் பார்க்கலாம்.

எந்த ஒரு முக்கியமான செயல் செய்யும்போதும் மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து, குலதெய்வத்துக்கு என பூஜையறையில் வைத்துவிடுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை உங்கள் குலதெய்வத்திடம் சொல்லி முறையிட்டு வேண்டிக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் .

எனவே உங்கள் குலதெய்வத்தை கோவிலுக்கு அடிக்கடி குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையாவது செல்லுங்கள் குலதெய்வ கோயிலுக்கு உதவுங்கள்.